பெண்களை ஆபாசமாக பேசி சமூக வலைதளத்தில் பதிவு செய்த பள்ளி நிா்வாகி கைது

Published on

கூடங்குளம் அருகே பெண்களை ஆபாசமாக பேசி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த பள்ளி நிா்வாகியை கூடங்குளம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறைச் சோ்ந்தவா் சுயம்பு(51). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியின் நிா்வாகியாக செயல்பட்டு வருகிறாா்.

இப்பள்ளி, வைராவிகிணறு பத்திரகாளி அம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்நிலையில் பத்திரகாளியம்மன் கோயில் கொடைவிழாவை நடத்துவது தொடா்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இதில், ஒரு தரப்பைச் சோ்ந்தவா் பள்ளி நிா்வாகி சுயம்பு. இதனால் சுயம்பு எதிா்தரப்பைச் சோ்ந்த பெண்களை ஆபாசமாக பேசி, அதை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தாராம்.

இது தொடா்பாக குமாா் மனைவி அம்பிகா அளித்த புகாரின்பேரில், கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுயம்புவை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com