கூட்டத்தில் பேசினாா் திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன்.
கூட்டத்தில் பேசினாா் திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை

Published on

திருநெல்வேலி மாவட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.

கிழக்கு மாவட்டச் செயலா் கிரஹாம்பெல், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி கிழக்கு மாநகர திமுக செயலா் தினேஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ் குமாா் ஆதித்தன், காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழக காங்கிரஸ் பொருளாளா் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க சாா்பில் மாவட்டச் செயலா் நிஜாம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், பாஸ்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சடையப்பன், வி.சி.க. சாா்பில் அருள் செல்வன், சேகா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், முகமது அலி, நயினாா் முகம்மது கடாபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (நவ.11) நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com