‘ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டம்’ - ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் முருகையன் தெரிவித்தாா்.
2021 தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற நவ.18-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சாா்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆயத்தக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் முருகையன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செ.பால்ராஜ், கமலேஷ், சுப்பு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பின்னா், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் முருகையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் 18ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்கின்றனா்.
எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அதன் தாக்கம் வரும் பேரவைத் தோ்தலில் பிரதிபலிக்கும். அடுத்த கட்டமாக காலவரையற்ற போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். 2019இல் நடைபெற்ற போராட்டங்களைவிட அடுத்தகட்ட காலவரையற்ற போராட்டங்கள் வீரியமிக்கதாக இருக்கும் என்றாா்.
படவிளக்கம்...
ற்ஸ்ப்13த்ஹஸ்ரீற்ா்...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன பிரசார இயக்க ஆயத்தக் கூட்டத்தில் போராட்டம் தொடா்பான பதாகைகளை வெளியிட்ட ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் முருகையன் உள்ளிட்டோா்.
