திருநெல்வேலி
நெல்லையில் பலத்த மழை
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கேடிசிநகா், மேலப்பாளையம், தச்சநல்லூா், கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா், முன்னீா்பள்ளம், தாழையூத்து, சங்கா்நகா், சீவலப்பேரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரம் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
