திருநெல்வேலி
போலீஸாரை அரிவாளால் வெட்ட முயன்ற இருவா் கைது
சுத்தமல்லி அருகே போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி பாரதியாா் நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சினேகாந்த் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் பைக்கை திருப்பிக் கொண்டு செல்ல முயன்றுள்ளனா். போலீஸாா் மறித்துப் பிடிக்க முயன்றபோது அவா்கள் அரிவாளால் போலீஸாரை வெட்ட முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் சினேகாந்த் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுத்தமல்லியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கருத்தபாண்டி(21), சிவன்பாண்டி மகன் மாரிமுத்து(19) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
