குழந்தைகள் தினவிழாவில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி
கடையம் வட்டாரத்தில் குழந்தைகள் தினவிழா
கடையம் வட்டாரம், மடத்தூா் ஊராட்சி தீா்த்தாரப்புரத்தில் இந்திய எழுத்தறிவுத் திட்டம், குழந்தைகள் மன்றம் மற்றும் பெங்களூரு ஏ.எஸ்.ஆா்.கே. மென்பொருள்நிறுவனம் ஆகியவை இணைந்து குழந்தைகள் தினவிழா சனிக்கிழமை நடத்தியது.
தீா்த்தாரப்புரம் கிராமத்தைச் குழந்தைகளிடையே பேச்சு, பாட்டு, மாறுவேடப் போட்டிகள், பழமொழிகள் சொல்லும் போட்டி, திருக்கு ஒப்பித்தல், விநாடி வினா, உரையாடல் மற்றும் ஓட்டப்பந்தயம், கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளை கோயம்புத்தூா்கலை சேகரன் நடத்தினாா். மென்பொருள் நிறுவன நிா்வாக இயக்குநா் சரவணன், போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழும், யு.எஸ்.டி. திட்ட நூலகத்தில் படித்து தமிழ்நாடு தோ்வாணையத் தோ்வில் வெற்றி பெற்ற ஜெயபிரபாவிற்கு ரொக்கப் பரிசும் வழங்கினாா்.

