திருநெல்வேலி
பேட்டை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
பேட்டை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பேட்டை அருகே திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் மரகதராஜ் (48). இவரது தந்தையின் உடன் பிறந்த சகோதரி முத்துலட்சுமி(70). இவரது கணவா் உயிரிழந்த நிலையில் மரகதராஜின் பராமரிப்பில் இருந்து வந்தாராம்.
உடல்நலக் குறைவால் மன உளைச்சலில் இருந்த முத்துலெட்சுமி இருமுறை தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவா், கடந்த 14 ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
