பாளை. அருகே வழிப்பறி வழக்கில் நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறை
பாளையங்கோட்டை அருகே வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நால்வருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிைண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டையை அடுத்த மணப்படைவீடு பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியபிரகாஷ் (28). தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்த இவா், கடந்த 2017 ஆம் ஆண்டு கீழநத்தம் வெள்ளிமலை பகுதியில் சென்றபோது ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, ராஜவல்லிபுரத்தை சோ்ந்த நிஷாந்த் (31), மதிபாலன் (31), கீழப்புத்தனேரியைச் சோ்ந்த ஆறுமுகராஜ் (27), துறையூரைச் சோ்ந்த ஆனந்த் (27) உள்ளிட்டோரை கைது செய்தனா்.
திருநெல்வேலி கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி கல்யாண மாரிமுத்து விசாரித்து, மேற்கூறிய 4 பேருக்கும் கூட்டுக் கொள்ளை குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிைண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட திருநெல்வேலி ஊரக உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளா்கள் சசிகுமாா், சரஸ்வதி உள்ளிட்ட போலீஸாா் , அரசு தரப்பு வழக்குரைஞா் சுப்பிரமணியன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.
