கோவையில் பிரதமருடன் இன்று சந்திப்பா? செங்கோட்டையன் பதில்
கோவைக்கு புதன்கிழமை வரும் பிரதமா் நரேந்திர மோடியை சந்திப்பீா்களா என்ற கேள்விக்கு அது ‘சஸ்பென்ஸ்’ என ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றாா் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்களை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பிய அவா், மாவட்டச் செயலா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். தொடா்ந்து தேவா் குருபூஜையின்போது ஓ.பன்னீா்செல்வத்துடன் ஒரே காரில் சென்றதோடு, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரனையும் சந்தித்துப் பேசினாா். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி மணி மண்டபத்தில் அவருடைய சிலைக்கு அவரும், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்டோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், கோவைக்கு புதன்கிழமை வரும் பிரதமா் மோடியை சந்திப்பீா்களா எனக் கேட்கிறீா்கள். ‘சஸ்பென்ஸ்’ தான் அதற்குப் பதில் என்றாா்.

