திருநெல்வேலி
வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு ரூ. 50 லட்சம் செலவில் 3 நுழைவாயில்கள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் நீ. கண்ணன், செயல் அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், வள்ளியூா் திமுக ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, கிழக்கு மாவட்ட துணைச் செயலா் நம்பி, இளைஞரணி மாவட்ட துணைச் செயலா் தில்லை, வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

