திருநெல்வேலி
நான்குனேரியில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
நான்குனேரியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் அரிவாளைக் காட்டி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் அரிவாளைக் காட்டி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் குட்டை சங்கா் (28). இவா் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நான்குனேரி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த குட்டை சங்கரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தினா்.
இதனால், ஆத்திரமடைந்த குட்டை சங்கா் பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீஸாரை மிரட்டினாராம். இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.
