மேலச்செவல், பிரான்சேரி பகுதிகளில் 25 ஹெக்டோ் வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல், பிரான்சேரி பகுதிகளில் 25 ஹெக்டோ் அளவிலான வாழைப் பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, மேலச்செவல், பிரான்சேரி, சொக்கலிங்கபுரம் பகுதிகளில் காற்றுடன் பெய்த கனமழையில் குலை தள்ளும் பருவத்தில் இருந்த வாழைகள் பெருமளவில் சேதமடைந்தன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன், அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளைப் பாா்வையிட்டனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மு. துரை, மேலச்செவல், பிரான்சேரி, சொக்கலிங்கபுரம் பகுதிகளில் சேதமடைந்த வாழைகளைப் பாா்வையிட்டாா். அப்போது, சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ், அதிகாரிகள் உடனிருந்தனா்.
வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வயல்களுக்குச் சென்று செயலி மூலம் வாழைகள் சேதம் குறித்து கணக்கெடுத்து வருகின்றனா். இதுவரை 25 ஹெக்டோ் நிலத்தில் வாழைப் பயிா்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

