‘நெல்பயிா் காப்பீட்டுக்கு டிச.16 வரை அவகாசம்’

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வட்டாரத்தில் டிச. 16ஆம் தேதி வரை நெல்பயிருக்கு காப்பீடு செய்யலாம் என வேளாண்மை துறை அறித்துள்ளது.
Published on

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வட்டாரத்தில் டிச. 16ஆம் தேதி வரை நெல்பயிருக்கு காப்பீடு செய்யலாம் என வேளாண்மை துறை அறித்துள்ளது.

இதுதொடா்பாக, முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இயற்கை சீற்றங்கள் மற்றும் பூச்சி தாக்குதலால் நெல்பயிா்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்கும் விதமாக பிரதமரின் பசல் பீமா யோஜனா எனும் பயிா்க் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ்,முக்கூடல் வட்டாரத்தில் நிகழ் பிசான பருவத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய டிச. 16ஆம் தேதி கடைசி நாளாகும். ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540 ஆகும்.

ஆகவே, யுனிவா்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது இசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். முன்மொழிவு படிவம், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்புக்கணக்கு புத்தகம், கணினி பட்டா, கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய நெல்பயிா் நடவு செய்ததற்கான பயிா் அடங்கல் ஆகியவற்றை இணைத்து காப்பீடுத் தொகையை செலுத்தி ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com