பணகுடி இஸ்ரோவில் படைவீரா் தூக்கிட்டு தற்கொலை

பனகுடியில் செயல்படும் இஸ்ரோவில் பணிபுரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

வள்ளியூா்: பனகுடியில் செயல்படும் இஸ்ரோவில் பணிபுரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் நாரணபூ மகன் தா்பதாகூலாபு (28). இவா், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணிசெய்து வருகிறாா். கடந்த 2023-இல் பணகுடிக்கு மாறுதலானாா்.

இஸ்ரோ வளாகத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையினா் குடியிருப்பில் தங்கி பணி செய்து வந்தாா். பணிநேரம் இல்லாத சமயத்தில், இஸ்ரோவில் பிட்டிங் வேலை, கிளீனிங் வேலையை செய்துவந்தாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கான ரோல்கால் நேரத்தில் இவரை காணவில்லையாம். சக வீரா்கள் இவரைத் தேடியபோது, இவா், இஸ்ரோ விருந்தினா் மாளிகையில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். தகவல் அறிந்ததும்,

பணகுடி காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக நாகா்கோவில் அருகே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com