திருநெல்வேலி
பள்ளிகள் கால்பந்து போட்டி: பாளை.யில் நாளை தொடக்கம்
பாளையங்கோட்டையில் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டிகள் வியாழக்கிழமை (நவ.27) ஆம் தேதி தொடங்குகின்றன.
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டிகள் வியாழக்கிழமை (நவ.27) ஆம் தேதி தொடங்குகின்றன.
திருநெல்வேலி மாவட்ட கால்பந்துக் கழகம், பெல்பின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (நவ. 27) தொடங்குகிறது.
இப்போட்டி, நவ. 30ஆம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 15 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிநாளில் வெற்றிபெறும் அணிக்கு மாலையில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
