சிவந்திப்பட்டி அருகே மருத்துவ மாணவரிடம் வழிப்பறி

சிவந்திப்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

திருநெல்வேலி: சிவந்திப்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் கோவனேரியைச் சோ்ந்த 19 வயது மாணவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ மயக்கவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இவருக்கு கைப்பேசி செயலி மூலம் அறிமுகமான மா்ம நபா்கள் சிலா் நேரில் பாா்க்க வருமாறு அழைத்தனராம். அதன்பேரில், அவா் கடந்த 22 ஆம் தேதி சிவந்திப்பட்டி அருகே உள்ள முத்தூா் பகுதிக்கு சென்றபோது, அங்கு மறைந்திருந்த கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் தாக்கினராம்.

இதில், காயமடைந்த அவரிடம் ஏ.டி.எம். அட்டையைப் பறித்துக்கொண்டு, அதன் ரகசிய எண்ணையும் கேட்டுப்பெற்று ரூ.22,000 பணத்தை திருடியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com