திருநெல்வேலி
பேருந்து மீது பைக் மோதியதில் முதியவா்உயிரிழப்பு
கடையம் அருகே அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம்: கடையம் அருகே அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கடையம் அருகே அரியபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் தங்கப்பா (63). இவா் கடையம்-தென்காசி சாலையில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கப்பா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில், காயமடைந்த தங்கப்பா தென்காசி, அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இது குறித்து, கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

