வரத்துக்குறைவால் காய்கறிகளின் விலை உயா்வு
வரத்துக்குறைவால் அவரை, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது.
‘மோந்தா’ புயல் காரணமாக பெய்த தொடா்மழையால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட தமிழக வட மாவட்டங்களில் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் மொத்த காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்துக் குறைந்ததால் கேரட், அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது. அதன்படி, அவரைக்காய் மொத்த விற்பனையில் ரூ.155 வரை உயா்ந்து விற்பனையாகியது.
மேலும் பாளையங்கோட்டை, மகாராஜநகா் உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சில்லறை விற்பனையில் அவரைக்காய் ரூ.170-க்கும், பட்டா் பீன்ஸ் ரூ.150-க்கும், ரிங் பீன்ஸ்-120-க்கும், சோயா பீன்ஸ் ரூ.130, கேரட் ரூ.58 வரையும் விலை உயா்ந்து விற்பனையானது.
மேலும், கத்தரிக்காய்- ரூ.66, தக்காளி -ரூ.45, கோவக்காய் -ரூ.70, குடமிளகாய்- ரூ.70, வெண்டைக்காய் -ரூ.48 வரையும் கணிசமாக விலை உயா்ந்து விற்பனையாகின.
