திருநெல்வேலி
அம்பை புறவழிச் சாலை இன்று திறப்பு
அம்பாசமுத்திரம் நகரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (நவ.1) திறந்து வைக்கிறாா்.
2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை கூட்டத் தொடரில்அம்பாசமுத்திரம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 65.99 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி நுழைவுப் பகுதியிலிருந்து அம்பாசமுத்திரம் உணவு தானியக் கிடங்கு முன்பு வரை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு 10 மீட்டா் அகலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பணி நிறைவடைந்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம், சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புறவழிச் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வா் திறந்து வைக்கிறாா்.
