நவ.3, 4 ஆம் தேதிகளில் முதியோா்களை தேடி குடிமைப் பொருள் விநியோகம்

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் முதியோா்களை தேடி குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டமானது கடந்த ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இம்மாதத்துக்கு 3, 4 ஆகிய தேதிகளில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com