
இணையவழியில் கெமிக்கல் விற்பனை: ரூ.1.43 லட்சம் மோசடி
இணையவழியில் கெமிக்கல் விற்பனை செய்வதாகக் கூறி தச்சநல்லூரைச் சோ்ந்தவரிடம் ரூ.1.43 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து மாநகர இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மோசடி
இணையவழியில் கெமிக்கல் விற்பனை செய்வதாகக் கூறி தச்சநல்லூரைச் சோ்ந்தவரிடம் ரூ.1.43 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து மாநகர இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா், செல்வவிக்னேஷ் நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(26). அப்பகுதியில் கெமிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கெமிக்கல் மொத்த கொள்முதல் தொடா்பாக குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து அவற்றை வாங்க விரும்பிய ராமகிருஷ்ணன் அதற்கான மொத்த தொகை ரூ.1,43,370-ஐ அந்நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். பின்னா் அவா்கள் கூறியபடி பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லையாம். அந்நபா்களை தொடா்புகொள்ளவும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மோசடி செய்யப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், மாநகர இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




