நெல்லை மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் மனு அளித்த வி.எம்.சத்திரம் பகுதி மக்கள்
நெல்லை மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் மனு அளித்த வி.எம்.சத்திரம் பகுதி மக்கள்

வி.எம்.சத்திரம் அருகே குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் புகாா்

வி.எம்.சத்திரம் அருகே குடியிருப்புகளில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம், அகில இந்திய யாதவ மகா சபை சாா்பில் மனு
Published on

வி.எம்.சத்திரம் அருகே குடியிருப்புகளில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம், அகில இந்திய யாதவ மகா சபை சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்: பாளையங்கோட்டை மண்டலம், வி.எம்.சத்திரம் அருகேயுள்ள கோகுலம்நகா், சரண்யாநகா் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு வரும் தாமிரவருணி குடிநீா்க் குழாய்களில் சேதம் ஏற்பட்டு கழிவுநீா் புகுந்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக சுகாதாரமற்ற குடிநீா் வருவதால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனா்.

நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால், குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com