பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

பேட்டையில் கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்
கோப்புப் படம்
Updated on

பேட்டையில் கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி நகரம் பேட்டை செக்கடி, அனவரத விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி(18). இவா், திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 1 ஆம் தேதி மயங்கிய நிலையில் இருந்த அவரை, உறவினா்கள் மீட்டு கண்டிகைப்பேரி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

இந்நிலையில் மாணவி சிவமதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக திருநெல்வேலி காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து பத்திரிகை அடிக்கப்பட்ட நிலையில் சிவமதி மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, பேட்டை காவல் நிலையத்தில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளா் விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் கருதி பாரபட்சமற்ற விசாரணையை உறுதிப்படுத்தவும், திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையா் விசாரிக்க உத்தரவிடப்படுவதாக மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com