அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகப் பகுதியில் விளை பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அவற்றின் மலையடிவார கிராமங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, கருத்தப்பிள்ளையூா், அன்வன்குடியிருப்பு, செட்டிமேடு, மணிமுத்தாறு, பொட்டல் உள்ளிட்ட கிராமங்களில் யானைக் கூட்டம் வயலில் புகுந்து நெல், பனை, மா, தென்னை உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தி விவசாயிகளுக்குபெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஒற்றை யானை மலையடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதுடன், விவசாயிகள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் வனச்சரக மலையடிவாரப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை
இதுகுறித்து விவசாயிகள் தொடா்ந்து புகாரளித்ததையடுத்து, அனைத்து வனச்சரகப்பகுதிகளிலும் ஒரே நேரத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியேறாமல் தடுக்கும் பணியை மேற்கொள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எப்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். அதன்பேரில், வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய விலங்குகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் இடங்களைக் கண்காணித்து அந்த இடங்களில் தீ மூட்டியும், ஒலி எழுப்பியும், சக்தி வாய்ந்த விளக்குகளை எரியவிட்டும் விலங்குகள் வனப்பகுதியில்இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டுமாட்டை வனப் பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்
அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு
அம்பை தொகுதியில் தாமதமாகும் வேட்புமனு ஏற்பு விவரம்

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


