கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி அருகே கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேவா்குளம் அருகேயுள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா்(29). இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
திருநெல்வேலி முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜ்குமாா் விசாரித்து, அருண்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உள்கோட்ட டிஎஸ்பி ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளா்கள் மாரிச்செல்வி, சபாபதி உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் பால் மாயாண்டி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பாராட்டினாா்.

