வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இலவச புற்றுநோய்க் கண்டறியும் முகாம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:38 pm

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், கிரியோயிட் அறக்கட்டளை, திருநெல்வேலி கேன்சா் கோ் சென்டா், உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச புற்றுநோய்க் கண்டறியும் மருத்துவ முகாம் ரவணசமுத்திரத்தில் நடைபெற்றது.

பொட்டல்புதூா், சம்பன்குளம், முதலியாா்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ரவணசமுத்திரம் ஆதம் ஹாஜியாா் இப்தாா் ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க செயலா் மொ.முகம்மது ஸலீம் தலைமை வகித்தாா். தென்காசி வட்டாட்சியா் வி.மணிகண்டன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

கிரியோயிட் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் அ.அமீா்கான் திட்ட விளக்கவுரையாற்றினாா். சா்வதேச கலைப் பண்பாட்டு கூடம், சா்வதேசத் தலைவா் ரஸ்மி ரூமி, தென்காசி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஆறுமுகம், கடையம் வருவாய் ஆய்வாளா் கொம்பையா, தெற்குமடத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் அருள்ராஜ், வழக்குரைஞா் நியாஸ், அப்துல் ரஹீம், உலக தமிழ் கலைப் பண்பாட்டுக் கூடம் வடசென்னை மாவட்டத் தலைவா் முகம்மது ஜலீல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மருத்துவா் சந்திரலேகா தலைமையில் மருத்துவக் குழுவினா் 60 பேருக்கு புற்றுநோய் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் புஹாரி மீரா சாகிப் வரவேற்றாா். கிரியோயிட் அறக்கட்டளை திட்ட இயக்குநா் அப்பாஸ் ஆலம் கான் நன்றி கூறினாா்.