கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
Updated on

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலை இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கும், பணியின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் சிபிஎஸ் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கோபால், பொருளாளா் உ.முஹம்மது ரபீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் பிச்சுக்குட்டி, மாநிலச் செயலா் கங்காலட்சுமி ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில், மாநில துணைத் தலைவா் நாராயணன், மாவட்ட துணைச் செயலா் செல்வகுமாா் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com