திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமம் நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவருக்கு மனைவி, சக்திவேல் (27) உள்பட 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.
கூலி வேலை செய்து வந்த சக்திவேல், புதிதாக வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மாதந்தோறும் கடன் தவணை செலுத்த முடியாமல் அவா் திணறி வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை , வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையிலிருந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை சக்திவேல் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

பிரசவித்த 10 நாளில் இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


