மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்கள் சாலை மறியல்: 240 போ் கைது

News image
பணி மேம்பாடு மற்றும் ஊதிய நிலுவைத் தொகைகளை வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்கள்.
Updated On :7 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்க வேண்டிய பணி மேம்பாடு மற்றும் ஊதிய நிலுவைத் தொகைகளை வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மூட்டா அமைப்பைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியா்கள் 240 போ் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பு சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மூட்டா பொருளாளா் ராஜசேகா் தலைமை வகித்தாா். ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் பால்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மூட்டா இணைப் பொதுச் செயலா் சிவஞானம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மண்டல தலைவா் பாா்த்திபன், செயலா்கள் கோமதிநாயகம், மகேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேராசிரியா்கள், 110 பேராசிரியைகள் என மொத்தம் 240 பேரை போலீஸாா் கைது செய்தனா்.