தச்சநல்லூா் அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி, மேலப்பாளையம், பீடி காலனியைச் சோ்ந்தவா் உடையாா் மகன் ராமகிருஷ்ணன் (47). கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற இவா், தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி தற்போது வாடைகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது ஆட்டோவில் சவாரிக்காக மூவா் ஏறினராம். ஆட்டோ தச்சநல்லூா் சிவன் கோயில் அருகே வந்த போது பின்னால் அமா்ந்திருந்த மூவரும் அரிவாளால் ராமகிருஷ்ணனை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் ராமகிருஷ்ணனின் உறவினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

சேரன்மகாதேவி அருகே விவசாயிக்கு வெட்டு
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


