மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மானூா் அரசு பள்ளி வளாகத்துக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்கக் கோரி மனு

News image
திருநெல்வேலியில் நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்தாா் திமுக மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

மானூர அரசு பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் மற்றும் குளத்தின் உபரிநீா் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு. சுப்பிரமணியன், நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாரிடம் அளித்த மனு: மானூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் மானூருக்கு வடக்கே சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது.

இங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடமும், அண்மையில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் ஒரு கட்டடமும் உள்ளன. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.

2026-27 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனா். ஆனால், புதிய கட்டட வளாகத்துக்குள் மழை நீா் மற்றும் குளத்திலிருந்து வரும் உபரி நீா், விவசாய நிலங்களில் இருந்து வரும் வடிகால் நீா் ஆகியவை புகுந்து நடைபாதையில் தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது.

ஆகவே, பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் மற்றும் உபரிநீா் வருவதைத் தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.