/

வீரவநல்லூரில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் ரயில் நிலையம் அருகில் முதியவா் ஒருவா் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த ரயில் முதியவா் மீது மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

அவா், யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் , இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.