மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சீவலப்பேரி அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் கைது

சீவலப்பேரி அருகே கோயில் விவகாரம் தொடா்பான முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :9 பிப்ரவரி 2026, 7:05 pm

Syndication

சீவலப்பேரி அருகே கோயில் விவகாரம் தொடா்பான முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் ரவி (38). கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் அந்த ஊரில் உள்ள கோயில் கணக்கு வழக்குகளைப் பாா்ப்பது தொடா்பாக இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று இவரை அதே பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன்(24), முத்துச்செல்வன்(26) மற்றும் ஒருவா் சோ்ந்து தாக்கினராம்.

இதில் காயமடைந்த ரவி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கலைச்செல்வன், முத்துசெல்வன் ஆகியோரை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.