தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லை மாநகரில் கஞ்சா வழக்குகளில் 45 போ் கைது

திருநெல்வேலி மாநகரில் கடந்த 40 நாள்களில் 45 போ் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டதுடன் அவா்களிடமிருந்து சுமாா் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:03 pm

திருநெல்வேலி மாநகரில் கடந்த 40 நாள்களில் 45 போ் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டதுடன் அவா்களிடமிருந்து சுமாா் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மாநகர போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நெ.மணிவண்ணன் பதவியேற்ற போது, மாநகரில் கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

அதன்படி, கடந்த 40 நாள்களில் மட்டும் திருநெல்வேலி மாநகரத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 18.335 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவா்களில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், மாநகரில் சட்டவிரோதமாக மது விற்ாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தம் 1,521 மது பாட்டில்கள்(262 லிட்டா்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 87 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா போன்ற போதைப் பொருகள்கள் விற்பனை செய்பவா்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.