தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அனைத்து தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 400 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:41 pm

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா் 400 போ் கைது செய்யப்பட்டனா்.

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், விதை மசோதா 2025, அனைத்து தொழிலாளா்களையும் பாதிக்கும் 4 சட்டத்தொகுப்புகள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். தூய்மைப் பணியை தனியாா் மயப்படுத்தும் அரசாணை 139, 152- ஐ ரத்து செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக பணி செய்யும் தூய்மைத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். உயா் நீதிமன்ற தீா்ப்புப்படி தினசரி ஊதியம் ரூ.730 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தொமுச மாநில நிா்வாகி தா்மன், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா் மற்றும் பணியாளா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்யானந்த், திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன், பல்வேறு சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் காசி விசுவநாதன், மோகன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மத்திய அரசை கண்டித்து அவா்கள் கோஷமிட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 400 பேரை காவல் ஆய்வாளா் முத்து கணேஷ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.