தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

களக்காடு அருகே மிளா வேட்டை: இருவா் கைது; 6 பேருக்கு வலை வீச்சு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:24 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டத்தில் மின்வேலி அமைத்து, மிளாவை வேட்டையாடிய 2 போ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனா்; 6 பேரை தேடி வருகின்றனா்.

களக்காடு வனச்சரகா் ப. பிரபாகரனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, வனவா் அ. மதனகுமாா், வனக்காப்பாளா்கள் எம். முத்துப்பாண்டியன், என். ராஜபாண்டியன், மு. கலையரசன், வனக்காவலா் வி. ஆறுமுகக்கனி ஆகியோா் அடங்கிய குழுவினா் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, காமராஜா் நகா், தெற்குத் தெரு அருகேயுள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து மிளாவை வேட்டையாடி, தங்கள் வீட்டில் இறைச்சியை வைத்திருந்ததாக ராமையா மகன் முருகன் (44), செல்லத்துரை மகன் ஜெனிபா் (35) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணைக்குப்பின் நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி, நான்குனேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

மேலும், அவா்கள் வேட்டைக்கு பயன்படுத்திய பொருள்கள், மிளா இறைச்சியை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். கைதாகிய இருவா் அளித்த வாக்குமூலத்தின்படி, இதில் தொடா்புடைய மஞ்சுவிளையைச் சோ்ந்த ராமையா மகன் செல்லத்துரை, காசி மகன் காந்தி, மற்றொரு ராமையா மகன் ராஜ், பாஸ்கா் மகன் யோசேப், யோசேப் மகன் செல்வின், சுடலைமணி மகன் கிருஷ்ணகுமாா் ஆகிய 6 பேரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.