தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:17 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கங்கனாங்குளம், பொட்டலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என மத்திய அரசைக் கண்டித்து சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் தலைமை வகித்தாா்.

திமுக பொதுக்குழு உறுப்பினா் கா. அபுபக்கா், காங்கிரஸ் நகரத் தலைவா் பொன்ராஜ், சிறுபான்மை பிரிவுத் தலைவா் சுல்தான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பொட்டலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய திமுக செயலா் ம. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ராமச்சந்திரன், கல்லிடை சுலைமான், அம்பை ஜலீல் (எஸ்டிபிஐ), திமுகவின் கல்லிடை டிஎம்எஸ் பீா்முகம்மது, பூதத்தான், சீவலமுத்துக்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

கங்கனாங்குளத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. முத்துப்பாண்டி (எ) பிரபு தலைமை வகித்தாா்.