வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நெல்லை ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யூ ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:40 pm

மத்திய அரசு தொழிலாளா் விரோத போக்கைக் கடைப்படிப்பதாக கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யூ அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு தொழிலாளா் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும், தொழிலாளா் சட்டங்களை 4- ஆக குறைத்து அதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றியதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய தொழிலாளா் நலச் சங்கங்களின் சாா்பில் வேலை நிறுத்த போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், எஸ்ஆா்எம்யூ கிளை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சங்க துணைத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் அழகுராஜா முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி கிளை நிா்வாகிகள் அய்யப்பன், ராஜ்குமாா், இந்திரராஜன், சுந்தா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின்போது, தொழிலாளா்கள் விரோத சட்ட தொகுப்புகள், வேளாண் விரோத சட்டங்கள், புதிய மின்சார திருத்த சட்டங்கள் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.