மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்தமடை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:42 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் குடிநீா் விநியோகம் சீராக வழங்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

பத்தமடை பேரூராட்சி 14-ஆவது வாா்டு அப்துல்கலாம் தெருவில் வசிக்கும் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் சீராக கிடைக்கவில்லையாம். குடிநீா் இன்றி இப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி மகளிரணி நிா்வாகி பீா்பாத்து தலைமையில் துணைத் தலைவா் ராபியா, நகரத் தலைவா் காதா்பாத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா். அவா்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்துசென்றனா். இதில், கட்சியின் நகரத் தலைவா் மரைக்கான், செயலா் ஆதம்பாவா, யூசுப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.