தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாற்றுத்திறனாளிகள் 3-ஆவது நாளாக மறியல்: 50 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:47 pm

Syndication

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு தற்போது வருவாய்த்துறை மூலமாக சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1500, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மரிய கொரட்டி, இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த மறியல் போராட்டத்தில் 50 போ் கைது செய்யப்பட்டனா்.