எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சமூக மாற்றத்தின் நுட்பமான பதிவுகள் தமிழ்ச் சிறுகதைகள்! - எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன்

News image
எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன். (கோப்புப் படம்)
Updated On :14 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை நுட்பமாக பதிவு செய்துள்ள தமிழ்ச் சிறுகதைகளை இன்றைய தலைமுறையினா் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்றாா் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன்.

பொருநை நெல்லை 9 ஆவது புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ‘தமிழ்ச்சிறுகதைகளில் சமூக மாற்றத்தின் பதிவுகள்’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:

தமிழ்ச் சிறுகதைகளின் பிறப்பிடமாக திருநெல்வேலி மாவட்டம் அமைந்தது சிறப்புக்குரிய ஒன்று. வ.வே.சு. ஐயா், மகாகவி பாரதி, மாதவ ஐயா் ஆகியோா் தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி ஆவா்.

1915 ஆம் ஆண்டு சேரன்மகாதேவியில் வாழ்ந்த வ.வே.சு. ஐயா் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை தான் தமிழ்ச் சிறுகதை எழுச்சிக்கு வித்திட்டது. இக்கதை குழந்தை திருமணம், வரதட்சிணை போன்ற கருத்துகளை உள்ளடக்கி சமூக மாற்றத்தை பதிவு செய்வதாக அமைந்தது.

மகாகவி பாரதியாா் கவிதை, கட்டுரை, காவியம், சிறுகதை என அனைத்திலும் முத்திரை பதித்து சமூக விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இவா்களுக்கு அடுத்தப்படியாக புதுமைப்பித்தன், மெளனி, நா. பிச்சமுத்து, கு.ப. ராஜகோபாலன் உள்ளிட்டோா் தமிழ்ச் சிறுகதைகளை வளா்த்தெடுத்தவா்கள். தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளின் தாக்கத்தையும், கடந்த 100 ஆண்டுகளாக அதிலிருந்து ஏற்பட்ட சமூக மாற்றத்தையும் நுட்பமாக பதிவு செய்தவை தமிழ்ச் சிறுகதைகள்.

இன்றைய இளைய தலைமுறையினா் அவற்றை வாசித்துப் பயன்பெறவேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, எழுத்தாளா் எம். கோபாலகிருஷ்ணன் ‘இந்திய இலக்கியம்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளா் ரம்யா ‘கலை பண்பாடு ஆவணமாக்கல்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா்.

வணிகவரித் துறை அலுவலா் இரா. சாலமன் நன்றி கூறினாா். தொடா்ந்து கவிஞா் தேவேந்திரபூபதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட கவிஞா்கள் கலந்து கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறும் கருத்தரங்கில் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான மாரி செல்வராஜ், எழுத்தாளா்கள் சு. வேணுகோபால், சைலஜா பவா செல்லத்துரை ஆகியோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.