வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :14 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

கடையம் அருகே மதுப்பழக்கத்தை கைவிட முடியாததால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையம் அருகே உள்ள பிள்ளை குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ராமச்சந்திரன் (35). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.

போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன், கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மது அருந்தத் தொடங்கினாராம். அதிலிருந்து விடுபட முடியவில்லை எனக் கூறி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா், ராமச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.