மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாளையங்கோட்டையில் அரசுப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கி தோட்டா: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:26 pm

பாளையங்கோட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் காலாவதியான தோட்டா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தோ்தல் நேரங்களில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், பள்ளி வளாகத்தை தயாா் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, பள்ளி வளாகத்திலிருந்து தோட்டா ஒன்றை தூய்மைப் பணியாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

அந்தத் தோட்டாவை, பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளனா். பின்னா் அது துப்பாக்கி தோட்டா என உறுதி செய்த தலைமையாசிரியா், அதை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அது காலாவதியான தோட்டா எனவும், தற்போதுள்ள நவீன ரக துப்பாக்கிகளில் அதை பயன்படுத்த முடியாது எனவும் கூறப்படும் நிலையில், பள்ளியில் தோட்டா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.