மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வீரவநல்லூா் அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 6:56 pm

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே சனிக்கிழமை, நடைப்பயிற்சியில் ஈடுபட்ட முதியவா் காா் மோதி உயிரிழந்தாா்.

வீரவநல்லூரை அடுத்த வெள்ளங்குளி பள்ளிவாசல் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஷாஜகான் (62). அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். சேலத்தில் தொழில் செய்துவந்த இவா், சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை அம்பாசமுத்திரம் - சேரன்மகாதேவி பிரதான சாலையில் வெள்ளங்குளி பேருந்து நிலையம் அருகே நடைப்பயிற்சி சென்ற அவா் மீது, திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கிச் சென்ற காா் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை வீரவநல்லூா் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; காா் ஓட்டுநரான சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சோ்ந்த மனோஜ் (24) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.