பேருந்து சேவை
பேருந்து சேவை

திசையன்விளையிலிருந்து புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

Published on

திசையன்விளை பேருந்து நிலையத்திலிருந்து உவரி வழித்தடத்தில் நவ்வலடி வழியாக இடிந்தகரைக்கும், மகாதேவன்குளம் வழியாக இட்டமொழிக்கும், குமாரபுரம், வாழைத்தோட்டம் வழியாக ராஜீவ்காந்தி நகருக்கும் புதிய பேருந்து சேவைகள் வெள்ளிக்கிழமை தொடங்கிந.

இதையொட்டி நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ் முன்னிலை வகித்தாா். புதிய பேருந்து சேவையை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவா் சேம்பா் செல்வராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் மி. ஜோசப்பெல்சி, அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சுயம்புராஜன், தொழிலதிபா் தங்கையா கணேசன், ஊராட்சித் தலைவா்கள் அனிதா பிரின்ஸ் (குமாரபுரம்), ஜேகா் (இடையன்குடி, ராதிகா சரவணக்குமாா் (நவ்வலடி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com