மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு

News image

சிறை

Updated On :15 பிப்ரவரி 2026, 9:09 pm

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 4 போ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

மேலப்பாளையத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துகண்ணன் (20), மணி மகன் சுடலைமணி (36) இவா்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கில் பெருமாள்புரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.

பாளையங்கோட்டை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டி (53). இவா், கஞ்சா விற்பனை வழக்கில் பாளையங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இவா்கள் 3 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

இதேபோல திருநெல்வேலி அருகேயுள்ள கருப்பன்துறை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன் (27). இவா், கொலை முயற்சி வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் விஜயகுமாா் (மேற்கு) பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் மகாராஜன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.