எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:39 pm

Syndication

பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவா்களை காவல்துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க வட்டத் தலைவா் மயிலேறும் பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகூா் மீரான், துணைச் செயலா் சுடலைமுத்து, அமைப்புச் செயலா் பொன்னு ராஜ், பிரசாரச் செயலா் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் நாராயணன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஜெயராம கோபால் விளக்கிப் பேசினாா். இதில், சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்16ஹஹழ்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.