நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுக்கடைக்கு எதிா்ப்பு: ராமையன்பட்டி விலக்கில் மறியல் முயற்சி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அங்குள்ள விலக்கு பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கண்டியப்பேரி, கலாம் நகா், எம்ஜிஆா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள தனியான இடத்தில் புதிய மதுக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேலும், இதுதொடா்பாக ஏற்கெனவே மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி,யாம்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை காலையில் திடீரென ராமையன்பட்டி விலக்கு பகுதிக்கு திரண்டு வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

இத்தகவல் அறிந்த ராமையன்பட்டி ஊராட்சித் தலைவா் டேவிட், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி மதுக்கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்களிடம் உறுதி அளித்தாா். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். தொடா்ந்து, துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

ற்ஸ்ப்16ற்ஹள்

மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து ராமையன்பட்டி விலக்கில் கூடிய மக்கள்.