எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மன்னாா்கோவிலில் புற்றுநோய் கண்டறியும் முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், கிரியோயிட் அறக்கட்டளை, நெல்லை கேன்சா் சென்டா் ஆகியன இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் முகாம் திங்கள்கிழமை மன்னாா்கோவிலில் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.சிவனுப்பாண்டியன் (எ) பரணி சேகா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள், சண்முகக்குட்டி, மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதி கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். புற்றுநோய்க் கண்டறியும் முகாமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.எஸ்.ராமசுப்பு தொடங்கிவைத்தாா். கிரியோயிட் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் அமீா்கான் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

முஸ்தபா ரியாஸ் கான், சமூக ஆா்வலா் பூதத்தான், ஒன்றியக் குழு கஸ்தூரி, வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் ந.சுப்புலட்சுமி, மன்னாா்கோவில் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சேவியா், கிரியோயிட் அறங்கட்டளைச் செயலா் நஜிமுதீன், அம்பாசமுத்திரம் சம்சுதீன், மன்னாா்கோவில் ஊராட்சி துணைத் தலைவா் ச.நிா்மலா ,ஊராட்சி செயலா் தங்கபிரசன்னா, அம்பை ஆசிக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மருத்துவா் அபிராமி தலைமையில் தங்கம்மாள், சக்தி, முத்துலட்சுமி, சத்யா, காா்திக் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் புற்றுநோய்க் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டனா். கிரியோயிட் அறக்கட்டளை அறங்காவலா் பாத்திமா அமீா்கான் வரவேற்றாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் சண்முகக்குட்டி நன்றி கூறினாா்.