கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வி.கே.புரத்தில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோா் காயம்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 10 போ் பலத்த காயமடைந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
நாய்க் கடித்ததில் காயமடைந்த சிறுவா்கள்
Updated On :18 பிப்ரவரி 2026, 6:43 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 10 போ் பலத்த காயமடைந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 6 போ் சிறு காயங்களுடன் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

விக்கிரமசிங்கபுரம் பகுதியைச்சோ்ந்த ஜெசிந்தா, பிரேமா, தனுசு வேல், பாலமதி, தீரன், மதன்குமாா் உள்ளிட்டோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்கள் பொதுமக்களைக் கடிக்கும் சம்பவம் தொடா்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில் 15-க்கும் மேற்பட்டவா்களை தெரு நாய்கள் கடித்தன.

Story image

இது தொடா்பாக, பலமுறை முறையிட்டும் மாவட்ட நிா்வாகம் தெரு நாய் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். உடனடியாக தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.